ஆப்நகரம்

Tamannaah: தமன்னாவை விஜய் காதலிக்கலயா?: அப்போ அந்த லிப் டூ லிப் கிஸ் சும்மாவா?

Vijay Varma: நடிகர் விஜய் வர்மா சொல்வதை பார்த்தால் அவரும், தமன்னாவும் காதலிக்கவில்லையா. அப்படி என்றால் கோவாவில் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தது என்னவாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 18 Jan 2023, 4:09 pm
விஜய் வர்மா சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதை பார்த்த தமன்னாவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Samayam Tamil are vijay varma and tamannaah not a couple
Tamannaah: தமன்னாவை விஜய் காதலிக்கலயா?: அப்போ அந்த லிப் டூ லிப் கிஸ் சும்மாவா?



காதல்

பாலிவுட் படங்களில் நடித்து வரும் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட இருவரும் ஜோடியாக கோவாவுக்கு சென்றார்கள். அங்கு கட்டிப்பிடித்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் விஜய் வேறு விதமாக பேசுகிறார்.

தமன்னா

லிப் டூ லிப் முத்த வீடியோ வெளியானது குறித்து விஜய்யும், தமன்னாவும் எதுவும் தெரிவிக்கவில்லை. அதன் பிறகும் கூட இருவரும் ஜோடியாக ஹோட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார்கள். சரி இது காதலே தான். இதை போய் அவர்கள் உறுதி செய்ய வேண்டுமா என ரசிகர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் தான் விஜய் அந்த பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படி செய்துவிட்டார்.

விஜய்

மிரர் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு லன்ச் டேட் என தெரிவித்துள்ளார் விஜய் வர்மா. அதாவது டேட்டிங் வதந்தி பற்றி தான் இப்படி கிண்டலாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய் தெரிவித்திருப்பதை பார்த்தவர்களோ, அப்படி என்றால் நீங்களும், தமன்னாவும் காதலிக்கவில்லையா என வியந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரசிகர்கள்

காதல் இல்லாமல் தான் கோவாவில் அப்படி முத்தம் கொடுத்துக் கொண்டீர்களா?. அப்போ அங்கு கிஸ்ஸடித்தது சும்மாவா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கோவாவுக்கு முன்பு நடிகரும், பாடகருமான தில்ஜித் தோசஞ்ச் இசை நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று பார்த்து ரசித்தார்கள். அங்கு கூட்டத்தில் அவர்கள் டான்ஸ் ஆடிய வீடியோ கூட வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


திருமணம்


தமன்னாவுக்கும், விஜய்க்கும் விரைவில் திருமணம் என்கிற செய்தி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்கள் தான் தற்போது ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு தம்முவுக்கு நிச்சயம் திருமணமாகிவிடும் என்று எதிர்பார்த்தால் இப்படியாகிவிட்டதே என ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

மனைவி

தனக்கு வரப் போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என விஜய் வர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, அந்த பெண் உண்மையானவராக இருக்க வேண்டும். முக்கியமாக அன்பானவராக இருக்கணும். ஜாலியான ஆளாகவும் இருக்க வேண்டும். கடினமான நேரங்களில் கூட சிரிக்கும் நபருடன் இருக்க விரும்புகிறேன். அழகான சிரிப்பு, பெரிய கண்கள் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்றார்.



எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்