ஆப்நகரம்

மாஸ்டர் டப்பிங்கில் அர்ஜூன் தாஸ் செய்த காரியம் ; தீனா ஜாலி வீடியோ!

மாஸ்டர் படத்தின் டப்பிங்கில் நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் தீனா இருவரும் காமெடியாக ரகளை செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Samayam Tamil 6 Mar 2020, 9:56 am
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங் பணிகள் சென்றுகொண்டிருக்கின்றன. விஜய் உள்ளிட்டோர் டப்பிங்கை முடித்துவிட்டதாகவும் மற்றவர்களின் டப்பிங் நடந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தீனா மற்றும் அர்ஜூன் தாஸ் இருவரும் ஃபன்னியாக செய்த டப்பிங் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Samayam Tamil arjun das


மாஸ்டர் படத்தின் டப்பிங் பணிக்காக சென்றிருந்த தீனாவும், அர்ஜூன் தாஸும் ஜாலியாக ஒரு டயலாக் டப்பிங் பேசினார்கள். கைதி படத்தில் அர்ஜூன் தாஸ் பேசிய லைஃப் டைம் செட்டில்மெண்ட் வசனத்தை தீனா ஜாலியாக வாயசைக்க, அவருக்கு வாய்ஸ் கொடுக்கிறார் அர்ஜூன் தாஸ். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா அக்கவுண்ட்டில் வெளியிட்டுள்ளார் தீனா.

View this post on Instagram A post shared by Dheena (@dheena_offl) on Mar 5, 2020 at 1:51am PST

இதுகுறித்து இன்ஸ்டாவில் தெரிவித்துள்ள தீனா, டப் பண்றமாதிரி ஆனா டப் பண்ணல அர்ஜூன் தாஸ் ஐயா என குறிப்பிட்டுள்ளார்.

கைதி படத்தில் ஏற்கனவே, தீனாவும், அர்ஜூன் தாஸும் சேர்ந்து நடித்திருந்தனர்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு மார்ச் 15ம் தேதி நடைபெறவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு இந்த முறை கோவையில் நடக்கவிருக்குறது என தெரிகிறது. இதில் விஜய் என்ன பேசப்போகிறார், அவரின் குட்டிக் கதை எதைப் பற்றி இருக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏப்ரல் 9 ம் தேதி படம் ரிலீசாகவிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்