ஆப்நகரம்

கைதி அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்!

கைதி படத்தில் தனது நடிப்பால் மிரட்டிய அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2020, 10:26 am
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் கைதி. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அர்ஜூன் தாஸ். அவரின் குரல் மற்றும் நடிப்புக்காக பலரால் பாராட்டப்பட்டவர். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil arjun das


அந்தகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தயாரிப்பது அட்லீ. ஏஃபார் ஆப்பிள் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முதல் படமாக இதை தயாரிக்கவுள்ளார்.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் தவிர, வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மூன்று தனித்தனி கதைகள் சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும் ஒரு படமாக இது இருக்கும் என அதன் இயக்குநர் விக்னராஜன் தெரிவித்துள்ளார்.

அட்லீ கடைசியாக விஜய் நடிப்பில் பிகில் படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக ஷாருக்கானுடன் இணைந்து படம் செய்வதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தயாரிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அட்லீ தயாரிக்கும் முதல் படத்தின் ட்ரெய்லர் நாளை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்