ஆப்நகரம்

சூப்பர் ஸ்டாருடன் மோதிப் பார்க்க முடிவெடுத்த அர்ஜுன்?

பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Samayam Tamil 2 Jun 2021, 3:25 pm

ஹைலைட்ஸ்:

  • சர்காரு வாரி பாட்டா படத்தில் நடிக்கும் அர்ஜுன்
  • மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் அர்ஜுன்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil arjun
பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சர்காரு வாரி பாட்டா. கொரோனாவின் இரண்டாம் அலையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடிக்குமாறு அர்ஜுனிடம் கேட்க அவரும் சரி என்று சொல்லிவிட்டாராம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் புதிது இல்லை. கடல், இரும்புத்திரை ஆகிய படங்களில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். தன் அபார நடிப்பால் பார்வையாளர்களிடம் சாபம் வாங்கும் அளவுக்கு நடிப்பார். இந்நிலையில் தான் அவர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாகியிருக்கிறார்.

அரவிந்த்சாமி அல்லது பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரை தான் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக்க திட்டமிட்டார்களாம். ஆனால் அது நடக்காமல் போக அர்ஜுனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

ஆந்திரா, தெலுங்கானா மாநில ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் தான் அர்ஜுன். சர்காரு வாரி பாட்டா படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத புது அவதாரத்தில் வருகிறாராம் மகேஷ் பாபு. விஜய் தேவரகொண்டாவை வைத்து கீத கோவிந்தம் ஹிட் படத்தை கொடுத்த பரசுராம் சர்காரு வாரி பாட்டாவை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
இந்த படம் மூலம் முதல்முறையாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். முன்னதாக துபாயில் படப்பிடிப்பு நடந்தபோது கீர்த்தி சுரேஷ் சிவப்பு நிறை சேலை அணிந்து படகை நோக்கி ஓடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். அப்பொழுது மகேஷ் பாபு, அர்ஜுன் மோதிக் கொள்ளும் காட்சிகளை படமாக்குவார்களாம். சர்காரு வாரி பாட்டா படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தை 2022ம் ஆண்டு சங்கராந்தி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்