ஆப்நகரம்

ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லா தேசம் என்று கைத்தட்டுங்கள்! - நடிகர் DRK கிரண் கோபமான பதிவு

பிரபல நடிகர் டிஆர்கே கிரண் தற்போது உள்ள கொரோனா பிரச்சனை, மக்கள் மற்றும் அரசியல் நிலைமை பற்றி கோபத்துடன் ஒரு கவிதை எழுதி வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2020, 6:19 pm
தமிழ் சினிமாவில் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் டிஆர்கே கிரண். கோ, அனேகன், காப்பான் போன்ற படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் சில படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil DRK Kiran with actor Suriya in the shooting of Kaappaan


அவர் தற்போது இந்தியாவில் நிலவும் கொரோனா பிரச்சனை பற்றி கவிதை ஒன்றை எழுதி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கில் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு பால்கனியில் அல்லது வாயிலில் நின்று கைதட்டி மருத்துவ மற்றும் அத்யாவசிய சேவைகளில் பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

அதை பலர் சரியாகசெய்தனர் . ஆனால் ஒரு சிலர் தெருவில் இறங்கி கூட்டம் கூடி கொண்டாடினர். இது பற்றித்தான் கலை இயக்குனர் டிஆர்கே கிரண் கவிதை எழுதியுள்ளார்.

"கை_தட்டுங்கள். நாங்கள் கையாலாகாதவர்கள் என்று கைதட்டுங்கள்.! எங்கள் தேசம் மாட்டுக்கும் சாணிக்கும் சிறந்தது என்று கைதட்டுங்கள்.!
ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லா தேசம் என்று கைத்தட்டுங்கள்.! வந்த வியாதிக்கு மருந்தில்லா தேசம் இதுவென மனம் குளிர்ந்து கை தட்டுங்கள்.!
பொருளாதாரம் அனைத்தும் பூமிக்குள் போனதென்று சந்தோசமாக கை தட்டுங்கள்.!
போட்ட பணம் எல்லாம் போன இடம் தெரியலன்னு பொறுமையோடு கை தட்டுங்கள்.! உழைத்து சேர்த்த பணம் வரியாக போகுதுன்னு வரிசையாக கை தட்டுங்கள்.!
கேள்வி கேட்பவர் எல்லாம் வேள்வியில் மரித்துப் போக.! நீதிமன்றங்கள் கூட நிதிக்காக அலைகின்றதென
அழகாக கை தட்டுங்கள்.!
கரவொலியால் கரைபடிந்த உங்கள் கரங்கள் சுத்தமாகட்டும்.!
ஓட்டுக்காக காசு வாங்கிய உங்கள் கைகள் பலமாக ஒலி எழுப்பட்டும்.! கேள்வி கேட்க துணிவின்றி உங்கள் இதயத்தின் துடிப்பு, கைத்தட்டலாக எதிர் ஒலிக்கட்டும்.!
கிண்டலும் கேலியுமாக நாட்டை துண்டுதுண்டாக கொன்றழிக்கும் மதத்திற்கும் சாதிக்கும் கை தட்டுங்கள்.!
மனிதன் வாழ வேண்டாம் என்று கை தட்டுங்கள்.! மூளையை விலைக்கு விற்ற முட்டாள்கள் என்று கை தட்டுங்கள்.!
உரிமையை பறிகொடுத்த ஊதாரிகள் என்று கை தட்டுங்கள். சாலையில் நின்று கை தட்டுவதற்கு கூச்சம் என்றால்.! மொட்டை மாடிக்கு சென்று மொத்தமாக கை தட்டுங்கள்.!
இந்த நாட்டை காப்பாற்ற இப்படியாக கைத்தட்டி உற்சாகமூட்டுவோம்.!
உங்கள் உற்சாகத்தால்,.. ஓடி வந்த பிணி கூட ஒளிந்துகொள்ள இடம் தேடும்!
மனிதன் சாகவேண்டும் கை தட்டுங்கள்!!!!!!!!!"


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்