ஆப்நகரம்

கார்த்திக்கு உதவி செய்தவர் வில்லனாக நடிக்கிறார்!

‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்திக்கு உதவி செய்த நடிகர் அருள்தாஸ், ‘நான் மகான் அல்ல -2’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

TNN 15 Mar 2017, 6:22 pm
‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்திக்கு உதவி செய்த நடிகர் அருள்தாஸ், ‘நான் மகான் அல்ல -2’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
Samayam Tamil aruldoss play a villan role in naan mahan alla 2
கார்த்திக்கு உதவி செய்தவர் வில்லனாக நடிக்கிறார்!


கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த படம் ‘நான் மகான் அல்ல’. இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இயக்குனர் சுசீந்திரனுககும் பெயர் வாங்கித் தந்த படமாகும். தற்போது சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ படத்தோடு, ‘நான் மகான் அல்ல’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன்.

முதல் பாகத்தில் நான்கு வில்லன்கள் நடித்தது போன்று இந்த பாகத்தில் நான்கு இளவட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து படமாக்கி வருகிறார் சுசீந்திரன். அதேசமயம், இந்த படத்தில் வில்லனாக நடிப்பது சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில், தற்போது அருள்தாஸ் வில்லனாக நடிப்பது தெரியவந்துள்ளது.

நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு உதவி செய்யும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் அருள்தாஸ். அவரை இரண்டாம் பாகத்தில் வில்லனாக்கியிருக்கிறார் சுசீந்திரன். மேலும், இந்த படத்தையும் முதல் பாகத்தைப்போலவே வெற்றிப் படமாக்கி விட வேண்டும் என்பதற்காக அதிரடியான ஒரு கதைக்களத்தை கையிலெடுத்திருக்கிறார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்