ஆப்நகரம்

அருள்நிதிக்கு ஜோடியான ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ள அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 16 Jul 2018, 5:09 pm
பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ள அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil arulnithi shraddha


நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், ‘யுடர்ன்’ என்ற கன்னட படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதையடுத்து இவர் தமிழில், ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அருள்நிதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் தலைப்பு வைக்காத படத்தை பரத் நீலகண்டன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.சினிமா சார்பில் சங்கர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது; ‘‘ என்னிடம் கதை சொல்ல இயக்குனர் பரத் பெங்களூர் வந்திருந்தார். அவர் என்னிடம் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். கதை எனககு ரொம்பவும் பிடித்துப் போனது. இந்தப் படத்தில் என் நடிப்பு திறமையை காட்ட நல்ல வாய்ப்பு இருக்கிறது’’ என்றார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்