ஆப்நகரம்

விஷால் - கார்த்தி படத்தை கைப்பற்றிய நடிகர் அருண்பாடியன்!

நடிகர்கள் விஷால், கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை நடிகர் அருண்பாண்டியன் நிறுவனம் வாங்கியுள்ளது.

TNN 8 May 2017, 4:32 pm
நடிகர்கள் விஷால், கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை நடிகர் அருண்பாண்டியன் நிறுவனம் வாங்கியுள்ளது.
Samayam Tamil arun pandian will take over the vishal and karthi movie
விஷால் - கார்த்தி படத்தை கைப்பற்றிய நடிகர் அருண்பாடியன்!


விஷால், கார்த்தி, சாயிஷா நடிப்பில் பிரபுதேவா இயக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இந்த படத்திற்காக தங்களுக்கு கிடைத்த சம்பளத்தை விஷால் மற்றும் கார்த்தி நடிகர் சங்க கட்டிடத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் ஆர்யாவும் இணைந்தார். மூன்று முன்னணி ஹீரோக்கள், பிரபுதேவா இயக்கம் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நடிகர் அருண்பாண்டியனின் ஏ அன்ட் பி நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசரி கணேஷ், பிரபுதேவா இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்