ஆப்நகரம்

‘சாஹோ’ படத்தில் பிரபாஸுடன் இணைந்த அருண் விஜய்!

பிரபாஸ் தற்போது நடித்து வரும் ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 16 May 2018, 3:34 pm
பிரபாஸ் தற்போது நடித்து வரும் ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil arun-vijay


‘பாகுபலி’ படத்தை அடுத்து பிரபாஸ் நடித்த வரும் படம் ‘சாஹோ’. இந்தப் படத்தை சுஜீத் இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நீல் நிதின் முகேஷ், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, லால், ஜாக்கி ஷராப் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஹங்கர்- எஷான்- லாய் இசையமைத்திருக்கிறார்கள்.


இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். இந்த செய்தியை நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொண்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்