ஆப்நகரம்

mafia : வெளியானது மாஃபியா வேடன் வீடியோ- அருண்விஜய் மாஸ்!

அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா படத்தின் பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

Samayam Tamil 8 Feb 2020, 12:36 pm

நீங்க புரபோஸ் பண்ண ஐடியா தரும் விஜய், சிவகார்த்திகேயன் மற்றும் மாதவன்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் மாஃபியா. இதன் பர்ஸ்ட் லுக் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனால் பலரும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் ஒரு பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.
Samayam Tamil vedan vanthacho


அருண் விஜய்யின் அட்டகாசமான தோற்றத்தில், பாடல் வீடியோ, கார் சேசிங் காட்சிகளோடு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. வேடன் வந்தாச்சோ என தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிகிறது.

அருண் விஜய் வேடன் வந்தாச்சு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்டைலான மாஸான கெட்டப்பில் அவர் பாடல் முழுக்க வருகிறார்.


ஒரு காட்டுல ஒரு ராஜா இருந்துச்சாம்னு அருண் விஜய் குரலில் தொடங்கும் இந்த பாடல் ரேப் கலந்த ஸ்டைலிஷ் பாடலாக இருக்கிறது. போதை மருந்துகளுக்கு எதிரான படமாக இருக்கும் என தெரிகிறது.
தனுஷ்43 படத்தில் இவரும் இருக்காரா?

கிட்டத்தட்ட வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க பாடலை ஒத்துள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மாஃபியா படத்தில் அருண்விஜய், பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஜாக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவு கோகுல் பினாய். தயாரிப்பு லைகா புரொடக்ஷன். படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்