ஆப்நகரம்

சிவகார்த்திகேயன் தயாரித்து உலக சாதனை படைத்த கனா திரைப்படம்!

சிவகார்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் கனா திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 4:31 pm
சிவகார்திகேயன்தயாரிப்பில்வெளியாகவிருக்கும் கனா திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil Kanaa-Motion-Poster-990x557


நடிகர் சிவகார்திகேயன், ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த மக்களின் ஆதரவால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இந்நிலையில், இன்று ரஜினி, விஜய்க்கு பிறகு அதிக குடும்ப ரசிகர்களை கொண்டு முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, மெரினா, வேலைக்காரன் என்று பல படங்களில் நடித்துள்ளார். இவர் படங்கள் ஓடாது என்று பலர் மறைமுகமாக விமர்சனம் செய்தபோது,, அவர் தொடர்ந்து வெற்றிகளை தன்வசப்படுத்தினர் .

தற்போது சிவகார்த்திகேயன் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார்.மேலும் அவர் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ’கனா’ . இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜேஷ், தர்ஷன், சத்தியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கிரிக்கெட் கனவு கொண்ட பெண்னின் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. உலக சினிமாவில் பெண்கள் கிரிக்கெட் மையப்படுத்திஅவ்வளவாக படங்கள் வெளியாகவில்லை. அதனால் இந்த திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்