ஆப்நகரம்

அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா?

அருண்ராஜா காமராஜின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று பரவி வருகிறது.

Samayam Tamil 26 Mar 2020, 9:19 am
கனா படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்த அருண்ராஜா காமராஜ் இயக்கும் இரண்டாவது படம் பற்றிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதாவது, தனது இரண்டாவது படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் அவர் சேரவிருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil arunraja


மான் கராத்தே படத்தில், சிவகார்த்திகேயனின் நண்பராக நடித்திருந்த அருண்ராஜா, நிஜத்திலேயே அவரின் கல்லூரி தோழர்தான். ராஜா ராணி படத்திலும் சிறிய வேடம் ஒன்றில் நடித்திருப்பார். பின்னர் ரஜினி, விஜய் படங்களில் பாடகராக அவதாரம் எடுத்தார். ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை பாடியவர் இவர்தான். விஜய் நடித்த பைரவா படத்துக்காக வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலும் இவர் குரலில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்த அருண்ராஜா, தனது நண்பர் சிவகார்த்திகேயன் உதவியும் அதை படமாக எடுத்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த கனா படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி முடித்துவிட்டாராம் அருண்ராஜா. பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை எழுதி நல்ல பெயரை பெற்றார். முன்னதாக, விஜய் 65 படத்தை இயக்குபவருக்கான பட்டியலில் இவரது பெயரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், அருண்ராஜாவின் இரண்டாவது படம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும், ஹீரோயின் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் தயாரிப்பாளரான போனிகபூர் பேனரில் எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்