ஆப்நகரம்

Karthi: பிரம்மாண்டமாக உருவாகும் 'பையா 2': கார்த்திக்கு பதிலாக களமிறங்கும் பிரபல ஹீரோ.!

கார்த்தி நடிப்பில் வெளியான பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 2 Feb 2023, 10:48 am
கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் பையா. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். பையா படத்தில் கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது.
Samayam Tamil Paiya
Paiya


இந்நிலையில், தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 13 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி இயக்கவுள்ளார். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. பையா படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் இதன் இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால், இரண்டாம் பாகத்தில் கார்த்தி, தமன்னா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ’பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா ஹீரோவாகவும் ஜான்விகபூர் நாயகியாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை நீண்ட காலமாக தமிழில் நடிகையாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றனர்.

Vijay Sethupathi: 3 வருடங்களுக்கு பிறகு துவங்கிய விஜய் சேதுபதி படம்: தாறுமாறு கூட்டணி.!

பையா இரண்டாம் பாகம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஆர்யா லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தார். 2012-ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் சமீரா ரெட்டி, அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது பையா இரண்டாம் பாகம் மூலம் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆர்யா, லிங்குசாமி மீண்டும் கைகோர்க்க உள்ளனர். ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் 'வெந்து தணிந்தது காடு' பட நாயகி சித்தி இட்ஞானி ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 67: தளபதி 67-ல் 'கைதி' பட நடிகர்: லோகேஷ் வைத்துள்ள தரமான சஸ்பென்ஸ்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்