ஆப்நகரம்

சூடுபட்டு விட்ட விஷயத்தை மனைவிக்காக மீண்டும் செய்யும் ஆர்யா?

மனைவி சயீஷாவின் கெரியரை பிக்கப் பண்ண வைக்க அவரை வைத்து படம் தயாரிப்பது என்று ஆர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Samayam Tamil 11 Mar 2021, 8:30 am
தன் மனைவி சயீஷாவுக்காக ஹீரோயினை மையமாகக் கொண்ட படங்களை தயாரிக்க ஆர்யா முடிவு செய்திருக்கிறாராம்.
Samayam Tamil arya to go suriya way for wifey sayyeshaa
சூடுபட்டு விட்ட விஷயத்தை மனைவிக்காக மீண்டும் செய்யும் ஆர்யா?


சயீஷா

அமலா- நாகர்ஜுனா தம்பதியின் மகன் அகில் அகினேனி ஹீரோவாக நடித்த அகில் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் சயீஷா. ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் அபார நடனத்தை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல பல ஹீரோக்களும் அசந்து போனார்கள். இதையடுத்து சயீஷாவை தங்களின் படங்களில் நடிக்க வைக்க ஹீரோக்களே பரிந்துரை செய்தனர். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியின் ஜுங்கா, ஆர்யாவின் கஜினிகாந்த், சூர்யாவின் காப்பான் ஆகிய படங்களில் நடித்தார் சயீஷா.

திருமணம்

கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யா, சயீஷா இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நேற்று திருமண நாள் கொண்டாடிய ஆர்யா, சயீஷாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சயீஷா தன் கெரியர் பிக்கப் ஆன நேரத்தில் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

கெரியர்

திருமணமாகிவிட்டாலே அந்த நடிகையின் கெரியர் டல்லடித்துவிடும். சயீஷாவுக்கும் அது தான் நடந்திருக்கிறது. 24 வயது தான் ஆகிறது ஆனால் அதற்குள் என் கெரியர் போச்சே என சயீஷா கவலை அடைந்துள்ளாராம். இதை பார்த்த ஆர்யா நம்ம அண்ணன் சூர்யா மாதிரி வேலை செய்ய முடிவு செய்திருக்கிறாராம். அதாவது சூர்யா எப்படி ஜோதிகாவின் படங்களை தயாரிக்கிறாரோ அதே போன்று தானும் சயீஷாவுக்காக படம் தயாரிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம் ஆர்யா.

ஆர்யா

முன்னதாக ஆர்யா படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கும், தயாரிப்புக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. பணத்தை இழந்ததால் இனி தயாரிப்பு வேண்டாம், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தார் ஆர்யா. நஷ்டப்பட்டு எடுத்த முடிவை தற்போது ஆசை மனைவிக்காக மாற்றிக் கொண்டிருக்கிறாராம். மீண்டும் படம் தயாரித்து நஷ்டம் அடையாமல் இருந்தால் சரி தான். இந்நிலையில் ஆர்யா, சயீஷா நடித்திருக்கும் டெடி படம் நாளை ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்