ஆப்நகரம்

ஆர்யாவின் அடுத்தப் படம் தனிக்காட்டு ராஜா?

'மஞ்சப்பை' இயக்குனர் ராகாவா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'தனிக்காட்டு ராஜா' என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 28 Feb 2016, 1:15 pm
'மஞ்சப்பை' இயக்குனர் ராகாவா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'தனிக்காட்டு ராஜா' என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil aryas next titled thanikaatu raja
ஆர்யாவின் அடுத்தப் படம் தனிக்காட்டு ராஜா?


இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தப் படம் 'தனிக்காட்டு ராஜா'. தற்போது கோலிவுட்டில் சூப்பர்ஸ்டார் நடித்த படங்களின் தலைப்பை வைப்பது டிரெண்டாகி வருகிறது. அதன்படி, சமீபத்தில் தனுஷ் நடித்த 'தங்கமகன்', ஜீவா நடித்துள்ள 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்யா படத்திற்கும் தலைவரின் படப்பெயரை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து தோல்வி படங்களை அளித்தத் ஆர்யாவுக்கு இப்படம் ஹிட் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடர்ந்த கட்டுப் பகுதியில் படமாகவுள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' நாயகி கேத்ரின் தெரசா நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜீவாவின் சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் த்யைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்