ஆப்நகரம்

இந்த வயசில இவருக்கு இது தேவையா? சூப்பர் ஸ்டாருக்கே சூப்பர் பஞ்ச்: எஸ்.ஏ.சி

ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்பதற்கிடையில் தற்போது விஜய்க்கும் அரசியல் ஆசை வந்துள்ளது.

TNN 22 Jun 2017, 6:52 pm
ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்பதற்கிடையில் தற்போது விஜய்க்கும் அரசியல் ஆசை வந்துள்ளது.
Samayam Tamil at the age of seventy should not come to politics says vijays dad sac
இந்த வயசில இவருக்கு இது தேவையா? சூப்பர் ஸ்டாருக்கே சூப்பர் பஞ்ச்: எஸ்.ஏ.சி


விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து அவருக்கு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய், ஏழை விவசாயிகள் பற்றி பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று வெளியான அவரது மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், வருங்கால முதல்வர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த அவரது தந்தை எஸ்.ஏ.சி., அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார். மக்கள் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதாக நினைக்கக் கூடாது. தங்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனை தேர்ந்தெடுப்பதாக நினைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இப்போது இன்னொரு காந்தி பிறக்க வேண்டும். ஆம், இளைஞர்களிடமிருந்து இன்னொரு காந்தி அரசியலுக்கு வரவேண்டும்.

70 வயதிலும், 80 வயதிலும், அரசியலுக்கு வந்தால் யாராலேயும் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். அவர் 70 வயது, 80 வயது என்று யாரை சொன்னார் என்று மறைமுகமாக உள்ளது. ஆனால், அவர் எதிர்மறையாக தீண்டியது ரஜினியைத் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்