ஆப்நகரம்

"100" படத்தில் காக்கிச் சட்டை அணியும் அதர்வா!

நடிகர் அதர்வா ‘100’ என்ற படத்தில் காக்கிச் சட்டை அணிந்து போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Samayam Tamil 9 Jul 2018, 5:50 pm
நடிகர் அதர்வா ‘100’ என்ற படத்தில் காக்கிச் சட்டை அணிந்து போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
Samayam Tamil Atharva-Murali


மறைந்த நடிகர் முரளியின் மகன் தற்போது இளம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் அதர்வா. நடிகர் முரளி 1990களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். தன்னுடைய 40 வயதிலும் கல்லூரி மாணவராக நடித்தார். அந்தளவுக்கு அவர் தனது உடலை பராமரித்து வைத்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரது மகன் அதர்வா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவரும் வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் இருக்கிறார்.

தற்போது நடிகர் அதர்வா ‘100 the film’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் அதர்வா காக்கிச் சட்டை அணிந்து போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தை ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்