ஆப்நகரம்

ரஜினி, விஜய், அஜித் செய்யத் தயங்கும் வேலையை செய்த நடிகர் அதர்வா!

முன்னணி நடிகர்கள், ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் செய்யத் தயங்கும் வேலையை வளரும் இளம் நடிகர் அதர்வா செய்து காட்டியுள்ளார்.

Samayam Tamil 22 Sep 2018, 1:39 pm
முன்னணி நடிகர்கள், ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் செய்யத் தயங்கும் வேலையை வளரும் இளம் நடிகர் அதர்வா செய்து காட்டியுள்ளார்.
Samayam Tamil adharva


நடிகர் அதர்வா, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை ஒரு படத்தில் செய்துள்ளார்.

தற்போது அதர்வா நடித்து வரும் படம் ‘பூமராங்’. இந்தப் படத்தில் அதர்வா மூன்று கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு மேக்கப்மேனாக ஹாலிவுட் கலைஞர்கள் பிரிட்டிஷில் சிங் மற்றும் மார்க் டிராய் டிசோஸா ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படத்தை கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா, 3 கெட்டப்பில் ஒன்றான மொட்டை கெட்டப்பை தைரியமாக ஏற்று கொண்டுள்ளாராம். இதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்த மொட்டை ரோல் தான் படத்தின் திருப்புமுனை. அதானலேயே படத்தில் அதர்வா உண்மையாக முடியில்லாமல் இருக்க வேண்டியதாகியுள்ளது.
இந்த செயலுக்கு அதர்வாவை தான் நிச்சியமாக பாராட்ட வேண்டும். ஏனென்றால் இப்படி மொட்டை அடித்துள்ளதால் அவரின் மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்