ஆப்நகரம்

கல்லூரி மாணவனாக அதர்வா மிரட்டும் ‘ஒத்தைக்கு ஒத்த’; ஜோடி சேர்ந்த ஸ்ரீதிவ்யா!

’ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்.

TIMESOFINDIA.COM 16 Sep 2018, 12:42 pm
சென்னை: ’ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்.
Samayam Tamil Othaikku Otha


இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநராக இருந்த பர்னேஷ், தனது முதல் படமான ‘ஒத்தைக்கு ஒத்த’ இயக்கி முடித்துள்ளார். கல்லூரியில் நடந்த நிஜ நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அதர்வா, ஸ்ரீ திவ்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் முன்னதாக ஈட்டி படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்காக அதர்வா தனது உடல் எடையை பெரிதும் குறைத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் பர்னேஷ் கூறுகையில், இப்படம் கமர்ஷியல் பொழுதுபோக்கு. பார்வையாளர்களை தங்களது கல்லூரி நாட்களுக்கு அழைத்துச் செல்லும். இதில் அழகிய காதலும் இருக்கிறது.

பல்வேறு காலக்கட்டங்களில் படம் எடுக்கப்பட்டு வந்ததால், நிறைவு செய்ய காலதாமதம் ஆனது. ஏனெனில் சில காட்சிகளை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே எடுக்க இயலும் என்றார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

விசாரணை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ராமலிங்கம், இப்படத்திலும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Atharvaa plays a college student in 'Othaiku Ottha'.

அடுத்த செய்தி

டிரெண்டிங்