ஆப்நகரம்

மாட்டுக்கு சுத்திபோடும் அதுல்யா ; ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படம்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அதுல்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Samayam Tamil 14 Apr 2020, 4:19 pm
ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்ட இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை பலரும் கொண்டாடிவருகின்றனர். சிலர் லாக்டவுண் காரணமாக கோவிலுக்கு செல்லமுடியாமலும், வீட்டில் பூசை செய்யமுடியாமலும் தவித்து, இந்த புத்தாண்டை வெறும் வாழ்த்துகளோடு முடித்துக் கொண்டனர். சினிமா பிரபலங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் புகைப்படங்களாலும், வாழ்த்துகளாலும் சமூக வலைதள பக்கங்களை நிரப்ப, கமெண்ட், லைக், ஷேர்களால் அவர்களை பின்தொடர்பவர்களும் திருப்தியடைந்து கொண்டனர். இந்நிலையில், நடிகை அதுல்யா ரவி தனது இன்ஸ்டா கணக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வைரலாகி வருகின்றன.
Samayam Tamil athulya ravi


அதுல்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ

View this post on Instagram இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வீட்டுக்குள் இருப்போம். பேரன்பும் பெருமகிழ்வும் கொள்வோம்😍😍 Wish you all a Prosperous Happy Tamil New Year. #throwbackpic #happytamilnewyear A post shared by Athulya Ravi (@athulyaofficial) on Apr 14, 2020 at 3:25am PDT

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வீட்டுக்குள் இருப்போம் பேரன்பும் பெருமகிழ்வும் கொள்வோம் என அவர் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் பலரும் அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுல்யா ரவி, காதல் கண் கட்டுதே எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வி இசட் துரையின் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், கேப்மாரி, நாடோடிகள் 2 படங்களில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது வட்டம் எனும் படத்தில் நடித்து வருகிறார். புதுமுக இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்