ஆப்நகரம்

'தெறி 2' வதந்ததிகளை மறுக்கிறார் அட்லீ

'ராஜாராணி' புகழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் 2ஆம் பாகம் குறித்து வெளியாகும் தகவல்களை இயக்குனர் மறுத்துள்ளார்.

TNN 5 Mar 2016, 1:01 pm
'ராஜாராணி' புகழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் 2ஆம் பாகம் குறித்து வெளியாகும் தகவல்களை இயக்குனர் மறுத்துள்ளார்.
Samayam Tamil atlee denies rumors on theri 2
'தெறி 2' வதந்ததிகளை மறுக்கிறார் அட்லீ


இது குறித்து இயக்குனர் அட்லீ கூறுகையில்,'தெறி 2' படம் குறித்து இதுவரை எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. தெறி இரண்டாம் பாகம் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே' என்று கூறியுள்ளார்.

'தெறி 2' படம், அரசியல் சார்ந்த படமாக உருவாகவிருக்கிறது என கோலிவுட்டில் பரவி வந்த புரளிக்கு இயக்குனர் அட்லீ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தற்போது, தெறி படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வரும் மார்ச் 20ஆம் தேதி தெறி படத்தின் ஆடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு தெரிவிக்கவில்லை.

இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்