ஆப்நகரம்

அட்லி தயாரித்த படம் மே 19ல் ரிலீஸ்!

விஜய்யை வைத்து இயக்கி வரும் அட்லி தயாரித்து வரும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படம் மே 19ல் வெளியாகவுள்ளது

TNN 10 Apr 2017, 5:23 pm
விஜய்யை வைத்து இயக்கி வரும் அட்லி தயாரித்து வரும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படம் மே 19ல் வெளியாகவுள்ளது.
Samayam Tamil atlee produced in release on may 19
அட்லி தயாரித்த படம் மே 19ல் ரிலீஸ்!


இயக்குநர் அட்லி தற்போது விஜய்யை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குவதற்கு இடையில் இயக்குநர் அட்லி ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தை தயாரித்து வருகிறார் . இப்படம் திகில் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கிறது.

அட்லி தயாரிப்பில் ரெடியாகும் முதல் படம் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தை அறிமுக இயக்குநர் ஐக் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார் .

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது படக்குழு . அதன்படி இப்படம் மே மாதம் 19 ஆம் தேதி ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்