ஆப்நகரம்

அட்லீயின் 'அந்தகாரம்' படம் நேரடி OTT ரிலீஸ்! முழு தகவல்

அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவிருந்த அந்தகாரம் படம் நேரடியாக நெட்பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 7:08 pm
இயக்குனர் அட்லீ இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தொடர்ந்து நல்ல படங்கள் கொடுத்து வருகிறார். அவர் முதலில் தயாரித்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் அவர் நடித்து இருந்தார். அதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து அட்லீ சில வருடங்கள் படம் தயாரிக்காமல் இருந்தார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் அந்தகாரம் என்ற படத்தினி தயாரித்து உள்ளார் அவர்.
Samayam Tamil Andhaghaarama


இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டது. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் ட்ரைலர் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் அந்தக்காரம் ட்ரைலர் பார்த்துவிட்டு "Can’t wait to see it!!" என ட்விட் செய்து இருந்தார். தான் முழு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதை தான் அப்படி கூறி இருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் வருண் தவானும் ட்ரைலர் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறி இருந்தார்.

விக்னராஜன் இயக்கியுள்ள இந்த படத்தினை தற்போது நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இது பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நெட்பிலிக்ஸ் நிறுவனம் தான் அந்தகாரம் படத்தை வாங்கி உள்ளது. இந்த மாதம் நேரடியாக இந்த OTT தளத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது படம். இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.


சமீபத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அட்லீயும் நேரடி OTT ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் HD தரத்தில் அந்த படம் லீக் ஆகிவிட்டது. அதுவும் அதிகாரபூர்வமாக ரிலீஸ் ஆகும் சில மணி நேரங்களுக்கு முன்பே லீக் செய்துவிட்டனர். இது சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண் குயின் படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் அந்த படத்தினை தயாரித்துள்ளார்.

விரைவில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் அந்தகாரம் படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகிவுள்ளது. ட்ரெய்லர் பார்க்கும் போதே அது புரிந்திருக்கும். மூன்று தனித்தனி கதைகள் சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும் ஒரு படமாக இது இருக்கும் என அதன் இயக்குநர் விக்னராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் தவிர, வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

அர்ஜுன் தாஸ் முதலில் கைதி படத்தின் மூலமாகத்தான் பிரபலமானார். லோகேஷ் கனகராஜ் தான் அதன் இயக்குனர். அந்த நட்பின் அடிப்படையில் அந்தகாரம் முழு படத்தையும் லோகேஹ் கனகராஜுக்கு போட்டு காட்டியுளளனர். அதை பார்த்து வியந்த அவர் ட்விட்டரில் படத்தை பாராட்டி தள்ளியிருந்தார்.

"இப்படி ஒரு பிரில்லியண்ட் படத்தை நான் சமீபத்தில் எதுவும் பார்க்கவில்லை. விக்னராஜன் நீங்கள் கதை கூறும் விதத்தை பார்த்து நான் உங்களது ரசிகன் ஆகிவிட்டேன். அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் மிரட்டியுள்ளனர். வாழ்த்துக்கள் அட்லீ. உங்கள் கையில் ஒரு வெற்றி படம் இருக்கிறது" என லோகேஷ் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்