ஆப்நகரம்

atlee என்ன எப்டி மறக்கலாம் ? - புகைப்படம் வெளியிட்ட அட்லீ மனைவி

இயக்குநர் அட்லீயின் மனைவி ப்ரியா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 11 Apr 2020, 11:45 am
தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களின் மூலம் கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் இயக்குநராக வலம் வரும் அட்லீ, கொரோனா சமயத்தில் ஆளே காணவில்லை. பெரிய அளவில் சமூக வலைதளங்களிலும் அவர் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி ப்ரியா தனது ட்விட்டர் கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil atlee


அட்லீ மனைவி ப்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ


இந்த புகைப்படத்தில் அவருடன் அட்லீயும் இருக்கிறார். இன்னொருவரை மறந்துவிட்டோமே. அது அவரின் செல்ல நாய்க்குட்டி பெக்கி. இந்த புகைப்படத்தில் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

பெக்கி - நீங்கள் எப்படி என்னை மறக்கலாம். நானும் இந்த புகைப்படத்தில் இருக்கிறேன்.

ப்ரியாவுடன் அவரது கணவர் அட்லீயும் அமர்ந்திருக்கிறார். கொரோனா காரணமாக அமைதியாக இருக்கிறார் போல.

கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த படம் பிகில். விமர்சன ரீதியாக சராசரியாக இருப்பதாக கூறப்பட்டாலும், வசூலில் பட்டையை கிளப்பியது. இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பாளரே ட்விட்டரில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அட்லீ, இந்தி படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானுடன் இணையும் இந்த படம் தமிழிலும் வெளியாகும் எனவும், அதில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களின் ஆசையாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிவந்தாலும், உண்மையாக நடந்தால் அட்லீயின் ரேஞ்ச் இந்திய அளவில் பெரியதாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்