ஆப்நகரம்

தெலுங்கில் தாமதமாகும் ‘அவள்’!

நடிகர் சித்தார் நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘ஜில் ஜங் ஜக்‘ . இந்தப் படத்திற்கு நடிகர் சித்தார்த்துக்கு எந்தப் பட வாய்ப்புகளும் வரவில்லை.

TNN 4 Nov 2017, 4:16 pm
நடிகர் சித்தார் நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘ஜில் ஜங் ஜக்‘ . இந்தப் படத்திற்கு நடிகர் சித்தார்த்துக்கு எந்தப் பட வாய்ப்புகளும் வரவில்லை.
Samayam Tamil aval movie will delay to release in telugu version
தெலுங்கில் தாமதமாகும் ‘அவள்’!


வேறு வழியில்லாமல் மீண்டும் சொந்தமாக படத்தை தயாரித்து வருகிறார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த மிலின்ட் இயக்கத்தில் ‘அவள்’ என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தார்.

இந்தப் படத்தை ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் ‘அவள்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படம், ஹிந்தியில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் ‘குருஹம்‘ என்ற பெயரில் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் நவம்பர் 10ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சித்தார்த் நடித்த தெலுங்குப் படம் வெளியாகி சுமார் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. ஆகையால் தெலுங்கு ரசிகர்கள் சித்தார்த்தை மறந்திருப்பார்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்