ஆப்நகரம்

Avantika : சினிமாவுக்குள் களமிறங்கும் குஷ்பூ - சுந்தர் சி மகள்…! வாழ்த்து சொல்லி வரும் பிரபலங்கள்…!

நடிகை குஷ்பூ வின் மகள் அவந்திகா சினிமாவுக்குள் அறிமுகமாகிறார்

Samayam Tamil 28 May 2022, 11:43 am

ஹைலைட்ஸ்:

  • நடிகைகுஷ்புவின் மகள் நடிகையாக அறிமுகமாக
  • இருப்பதாக குஷ்புதெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil avantika actress khushboos daughter who is making her debut in cinema celebrities who come to greet
Avantika : சினிமாவுக்குள் களமிறங்கும் குஷ்பூ - சுந்தர் சி மகள்…! வாழ்த்து சொல்லி வரும் பிரபலங்கள்…!
பிரபல நடிகை குஷ்பூவின் மகள் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ. தமிழில் பிரபுவின் ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமனார்.
பின்னர் ரஜினி, கமல், சரத்குமார் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அப்போது அவர் இளைஞரின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அனைத்து ஸ்டார் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.


Vijay Antony : விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் பட டீசரை வெளியிடும் பிரபல நடிகர்…!

இதையடுத்து முறைமாமன் படத்தை இயக்கிய சுந்தர்.சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக இருந்து வருகின்றனர் .இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

நடிகையாக இருக்கும் குஷ்பூ தயாரிப்பாளராகவும், சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார். தற்போது அரசியலில் பா.ஜ.க கட்சியில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தனது மூத்த மகள் அவந்திகா, விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது மூத்த மகள் அவந்திகா, லண்டனில் நடிப்பு பயிற்சி படிப்பை முடித்திருக்கிறார். அவரே தனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்புவதால் அவருடைய போராட்டம் இப்போது ஆரம்பிக்கிறது.

நாங்கள் அவரை வைத்து படம் எடுக்கவோ அல்லது அவரை எங்கேயும் பரிந்துரைக்கவும் செய்யப்போவதில்லை. எனவே அவருக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் தேவைப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் மகள் திரைத்துறையில் அறிமுகமாக இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்