ஆப்நகரம்

வெளியான முதல் நாளிலேயே பாகுபலி-2 ரூ.100 கோடி வசூல்!

பாகுபலி-2 படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TOI Contributor 29 Apr 2017, 2:51 am
புதுடெல்லி: பாகுபலி-2 படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil baahubali 2 boxoffice collection day 1 ss rajamoulis
வெளியான முதல் நாளிலேயே பாகுபலி-2 ரூ.100 கோடி வசூல்!


ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி-2, பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளனர். இந்தபடம் கடந்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறைவடையாமல் இருந்ததால் வெளியாவதில் தாமதமானது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என பதில் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் உலக முழுவதும் பாகுபலி-2 வெளியானது. இந்த படத்தை பார்க்க திரையரங்குகளில் நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெடுகள் வாங்கினர்.

இதையடுத்து முதல் நாளிலேயே பாகுபலி ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை எந்த இந்திய படமும் முதல் நாளில் ரூ.100 கோடி வசூல் செய்யவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்