ஆப்நகரம்

'பாகுபலி 2': 9000 திரையரங்குகளில் உலகெங்கும் மகத்தான வெளியீடு

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.

Hindustan Times 25 Apr 2017, 3:51 pm
சென்னை: எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.
Samayam Tamil baahubali 2 gargantuan release for ss rajamoulis film in 9000 screens worldwide
'பாகுபலி 2': 9000 திரையரங்குகளில் உலகெங்கும் மகத்தான வெளியீடு


மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியாகிறது.

அமெரிக்காவில் 1100 திரையரங்குகளிலும், மற்ற நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கிறது. உலகம் முழுவதும் மகத்தான வெளியீடு காரணாமாக 'பாகுபலி 2' திரைப்படம் முதல் நாளிலேயே மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் 3வது இந்திய திரைப்படம் 'பாகுபலி 2' ஆகும். அமெரிக்காவில் உள்ள 40 ஐமேக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

மேலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் நாளிலேயே எளிதாக ரூ.50 கோடி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்