ஆப்நகரம்

வசூலில் கபாலி, தெறி, வேதாளத்தை தமிழகத்தில் பின்னுக்கு தள்ளிய பாகுபலி 2!!

பாகுபலி 2 தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி கபாலி, தெறி, வேதாளம் ஆகிய படங்களின் முதல் ஒரு வார கால சாதனைகளை முறியடித்துள்ளது.

TOI Contributor 4 May 2017, 3:00 pm
பாகுபலி 2 தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி கபாலி, தெறி, வேதாளம் ஆகிய படங்களின் முதல் ஒரு வார கால சாதனைகளை முறியடித்துள்ளது.
Samayam Tamil baahubali 2 has crossed kabali theri vedhalam in one weel box office collection in tamil nadu
வசூலில் கபாலி, தெறி, வேதாளத்தை தமிழகத்தில் பின்னுக்கு தள்ளிய பாகுபலி 2!!


பாகுபாலி-2 வெளியான முதல் நாளில் இருந்து உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 11 கோடி வசூல் செய்து இருந்தது. ஆனாலும், ரஜினிகாந்த் நடித்த கபாலியின் முதல் நாள் வசூலை நொறுக்க முடியவில்லை. தமிழகத்தில் கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 22 வசூலித்து இருந்தது.

இத்துடன் தெறி, வேதாளம் ஆகிய படங்களின் சாதனையையும் நெருங்க முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது கடந்த ஒரு வாரம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி இந்தப் படங்களின் ஒரு வார வசூல் சாதனையை முறியடித்துள்ளது. படம் வெளியான கடந்த 6 நாட்களில் தமிழகத்தில் ரூ 53 கோடி வரை வசூல் ஈட்டி சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தப் படங்களின் ஒட்டு மொத்த தமிழக வசூல் சாதனையை பாகுபலி 2 முறியடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Baahubali 2 has crossed Kabali, Theri, Vedhalam in one weel box office collection in Tamil Nadu!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்