ஆப்நகரம்

‘பாகுபலி 2’ வெளியீட்டுக்கு முன் ‘பாகுபலி’ முதல் பாகம் மீண்டும் வெளியிட திட்டம்!

‘பாகுபலி 2’ படம் வெளியீட்டுக்கு முன் அதன் முந்தைய பாகமான ‘பாகுபலி’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

TNN 18 Mar 2017, 1:55 pm
‘பாகுபலி 2’ படம் வெளியீட்டுக்கு முன் அதன் முந்தைய பாகமான ‘பாகுபலி’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil baahubali 2 release before baahubali re release the first part of the program
‘பாகுபலி 2’ வெளியீட்டுக்கு முன் ‘பாகுபலி’ முதல் பாகம் மீண்டும் வெளியிட திட்டம்!


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ‘பாகுபலி’ முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதற்கான விடை அதன் அடுத்த பாகத்தில் தான் இருப்பதால் ‘பாகுபலி-2’ மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘பாகுபலி-2’ படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘பாகுபலி-2’ படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகுபலியின் முதல் பாகத்தை மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ரிலீஸ் செய்வதன் மூலம் படத்தின் தொடர்ச்சியை மக்கள் கண்டுகளிக்க வசதியாக இருக்கும் என்றார். மேலும் ‘பாகுபலி’ முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்ததாகவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்