ஆப்நகரம்

பாகுபலி 2 நீங்க பாக்கலயா! கவலை வேண்டாம் விஜய் டி.வில போடுராங்க பாஸ்!

பிரமாண்ட படமான பாகுபலி 2 வது பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

TNN 5 Oct 2017, 11:50 am
பிரமாண்ட படமான பாகுபலி 2 வது பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
Samayam Tamil baahubali 2 the conclusion is to be telecasted in vijay tv on october 8th
பாகுபலி 2 நீங்க பாக்கலயா! கவலை வேண்டாம் விஜய் டி.வில போடுராங்க பாஸ்!


இந்தியாவின் பிராமாண்ட சினிமாவாக போற்றப்படுகிறது பாகுபலியின் இரண்டாம் பாகம். சா்வதேச அளவில் 1500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் இப்படம் வெளியானது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மரகதமணி இசை அமைத்திருந்தார். கே. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஷோபு எர்லகண்டா, பிரசாத் தேவினேனி தயாரித்திருந்தார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று 15 மொழிகளில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியான இந்தப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நெட் ஒர்க் நிறுவனம் பலகோடி ரூபாய்க்கு வாங்கியது.

விஜய் டி.வியில் இந்தப் படம் வருகிற 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்