ஆப்நகரம்

ஸ்ரீ தேவி குறித்த சர்ச்சை கருத்து : பாகுபலி இயக்குநர் பதில்

பாகுபலி படத்தில் ஸ்ரீ தேவி நடிக்காதது குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாகுபலி இயக்குநர் ராஜமௌலி பதிலளித்துள்ளார்.

TNN 9 Jul 2017, 12:17 am
சென்னை : பாகுபலி படத்தில் ஸ்ரீ தேவி நடிக்காதது குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாகுபலி இயக்குநர் ராஜமௌலி பதிலளித்துள்ளார்.
Samayam Tamil baahubali director ss rajamouli responds to the sridevi controversy
ஸ்ரீ தேவி குறித்த சர்ச்சை கருத்து : பாகுபலி இயக்குநர் பதில்


பாகுபலி படத்தில் சிவகாமி கதாபத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீ தேவியை அணுகியதாலும் அவர் அதற்கு கடுமையான நிபந்தனைகள் வித்தித்ததால் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்ததாகவும் பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நடிகை ஸ்ரீ தேவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அந்த சர்ச்சை கருத்து குறித்து ராஜமௌலி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறும் போது," இந்த கருத்துக்களில் யார்உடைய கருத்து உண்மை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இந்த விஷ்யத்தை பொது வெளியில் விவாதம் செய்திருக்ககூடாது. அதற்காக வருத்துகிறேன்.

ஸ்ரீதேவி மீது எனக்கு மரியாதை உள்ளது. அவருடைய மாம் பட ட்டிரெய்லர் சுவாரசியமாக உள்ளது. மாம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் " என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராஜ மௌலி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்