ஆப்நகரம்

பிரபாஸ் மீது நடிகை வரலட்சுமிக்கு ஒரு கிரஷ்!

பிரபல நடிகை வரலட்சுமி, நான் பிரபாஸைதான் காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Feb 2019, 5:13 pm
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை வரலட்சுமி. இவர் ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் வந்த நல்ல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அதிகமாக நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’ உட்பட பல படங்களில் அவர் வில்லியாக நடித்துள்ளார். இதனால் தொடர்ந்து அவரது மார்க்கெட் உயர்ந்து வருகிறது.
Samayam Tamil varu-prabhas


இவர் நடிகர் விஷாலை காதலித்து வருகிறார் என்று ஓரிரண்டு வருடங்களாக ஒரு செய்தி உலாவந்தது. சமீபத்தில் நடிகர் விஷால் தன்னுடைய திருமணம் பற்றி வெளிப்படையாக கூறியதால்தான் இவர்களின் காதல் கிசு கிசு ஒரு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மிது கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார். நான் ‘ஐ லவ் யூ’ சொல்வதென்றால் அது ‘பாகுபலி’ பிரபாஸிடம் தான் சொல்வேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்