ஆப்நகரம்

இந்தியில் ரூ.400 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது பாகுபலி2

இந்தி மொழியில் வெளியான பாகுபலி 2 படம், வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது.

TNN 13 May 2017, 8:13 am
டெல்லி: இந்தி மொழியில் வெளியான பாகுபலி 2 படம், வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது.
Samayam Tamil baahubali2 records history in hindi with first ever rs 400cr movie
இந்தியில் ரூ.400 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது பாகுபலி2


இயக்குநர் ராஜமௌலி படைப்பில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பாகுபலி படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாகுபலி 2 படம் உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் ஆதரவைத் தொடர்ந்து, படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஒரே வாரத்தில் இந்தியப் படங்களின் வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்து, தொட முடியாத சிகரத்தில் அமர்ந்தது. ஒட்டுமொத்தமாக பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1250 கோடியைத் தாண்டி வசூல் வேட்டை தொடர்கிறது.

இந்நிலையில் இந்தி மொழியில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதல் முறையாக ரூ.400 கோடி வசூல் செய்து, பாகுபலி 2 சரித்திரம் படைத்தது. இதற்கு முன்பு முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை, கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான கஜினி படம் பெற்றிருந்தது. இதையடுத்து முதல் ரூ.200 கோடி படம் என்ற பெருமையை 3 இடியட்ஸ் படமும், முதல் ரூ.300 கோடி படமாக பி.கே படமும் பெற்றது. இந்த மூன்று படங்களிலும் ஆமிர்கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படங்களின் வசூல் சாதனைகளை தற்போது பாகுபலி 2 படம் முறியடித்துள்ளது.

Baahubali2 records history in Hindi with first ever Rs.400cr movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்