ஆப்நகரம்

வெள்ளித்திரையில் மீண்டும் ‘பாட்ஷா’

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘பாட்ஷா’ மீண்டும் வெள்ளித் திரைக்கு வரவுள்ளது.

TOI Contributor 5 Nov 2016, 12:20 pm
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘பாட்ஷா’ மீண்டும் வெள்ளித் திரைக்கு வரவுள்ளது.
Samayam Tamil baasha film will be coming to the silver screen again
வெள்ளித்திரையில் மீண்டும் ‘பாட்ஷா’


ரஜினி நடித்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்தான் ‘பாட்ஷா’. இந்தப் படம் 1995ம் ஆண்டு ஜனவரி 15 பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படத்தை சத்யா மூவிஸ் தயாரித்தது. படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இந்தப் படம் அப்போதே ரூ.27 கோடி வசூலித்து இருந்தது.

மீண்டும் இந்தப் படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது. காரணம் அன்று ரஜினியின் 66வது பிறந்தாள். மீண்டும் அந்த நாளில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தாக வரவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்