ஆப்நகரம்

இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளான பேபி அனிகா!

சென்னை: ‘என்னை அறிந்தால்’ படத்தை அடுத்து பேபி அனிகா, இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 16 Nov 2018, 4:19 pm
நடிகர் அஜித் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
Samayam Tamil Ajith.


இந்தப் படத்தில் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் டி.இமான் முதன்முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பேபி அனிகா அஜித்தின் மகளாக நடித்துள்ளார். விளையாட்டு வீராங்னையாக விரும்பும் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பாசமிகு தந்தையாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அதிரடி சண்டைக் காட்சிகள அதிகம் இல்லாமல் படம் முழுவதும் நகைச்சுவை மற்றும் செண்ட்டிமெண்ட் நிரம்பி வழியும் குடும்பப் பொழுதுபோக்குப் படமாக ‘விஸ்வாசம்’ உருவாகியுள்ளது.

மேலும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகும் அன்று ரஜினியின் ‘பேட்ட’ படமும் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்