ஆப்நகரம்

விஜய் படத்தில் பாகுபலி கதாசிரியர்

இளையதளபதி விஜய் படத்தில் பாகுபலி படத்தின் கதாசிரியர் இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

TNN 21 Sep 2016, 11:27 pm
பரதன் இயக்கத்தில் விஜய் பைரவா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து தெறி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க அட்லியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்தன.
Samayam Tamil bahubali screenwriter joint vijay movie
விஜய் படத்தில் பாகுபலி கதாசிரியர்

தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லி இப்படத்தை இயக்கவுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் கதையை உருவாக்கியவர் விஜயேந்திர பிரசாத். இவர், ஏற்கனவே நான் ஈ, மகதீரா, பஜ்ராங்கி பைஜான் ஆகிய படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது விஜய் படத்தில் இணையப்போவதாக தகவல் வெளியானது. விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தெறி பார்ட் – 2ல் இணைந்துள்ளனர். இவர்களுடன், கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணைந்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்