ஆப்நகரம்

தந்தையை இயக்கியவர் மகனை இயக்குகிறார்?

நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 10 Oct 2017, 3:27 pm
நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil bala will direct vikrams son dhruv film
தந்தையை இயக்கியவர் மகனை இயக்குகிறார்?


சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரிமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் விகரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கமல்ஹாசன் மகள் அக்ஷாரா ஹாசன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், சூர்யா & ஜோதிகா மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவிடமும் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை ந்டைபெற்று வருகிறதாம். இந்தப் படம் பற்றி தெளிவான விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Bala will direct vikram’s son dhruv film

அடுத்த செய்தி

டிரெண்டிங்