ஆப்நகரம்

ரகசியமாக நடைபெற்ற நிச்சயத்தார்த்தம் குறித்து நடிகையின் பதில்!

தனது நிச்சயத்தார்த்தம் ரகசியமாக ஏன் நடந்தது குறித்து நடிகை பாவனா பதில் அளித்துள்ளார்.

TNN 11 Mar 2017, 3:57 pm
தனது நிச்சயத்தார்த்தம் ரகசியமாக ஏன் நடந்தது குறித்து நடிகை பாவனா பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil bavana explained about her engagement
ரகசியமாக நடைபெற்ற நிச்சயத்தார்த்தம் குறித்து நடிகையின் பதில்!


நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருச்சூரில் நடைபெற்றது. கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்துவருகிறார் பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் தற்போதுதான் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 16 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியரும் பங்கேற்றார்.

இந்நிலையில் பாவனா ஒரு பேட்டியில் கூறியதாவது: என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக்கூடாது என்பதற்காக ரகசியமாக நடத்தினேன். அதனால் இந்நிகழ்ச்சி என் வீட்டில் நடைபெற்றது. என் நெருங்கிய நண்பர்களைக்கூட நான் அழைக்கவில்லை. நிச்சயதார்த்தம் நடக்கிறது என்கிற தகவலை மட்டுமே சொன்னேன்.

என் திருமணம் நடக்கும்போது எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளலாம் என்றுள்ளேன். ஆனால் என் நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெளியே தெரிந்துவிட்டது. நவீனைக் கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என் முதல் கன்னடப் படமான ‘ரோமியோ’வின் தயாரிப்பாளர் அவர். இந்த வருடம் எங்களின் திருமணம் நடைபெறும் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்