ஆப்நகரம்

இந்திப் படத்திற்காக உடல் எடையை 10 கிலோ குறைத்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்திப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை 10 கிலோ குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Apr 2019, 1:56 pm
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்திப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை 10 கிலோ குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.
Samayam Tamil rakul.


நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தேவ் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. தற்போது இவர் பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தற்போது அவர் ‘தே தே பியார் தே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் படு கவர்ச்சியான பிகினி பிளவுசுடன் சேலையில் கவர்ச்சியாக ஆடியிருந்த பாடல் வெளியாகி வைரலானது. இந்த படத்திற்காக ராகுல் ப்ரீத் 10 கிலோ உடல் எடையை குறைத்தாராம். இந்தப் படம் குறித்த ரகுல் ப்ரீத் கூறுகையில், “நான் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறேன். இயக்குனர் என்னுடைய எடையை குறைக்கச் சொன்னார். அவர் சொன்னதை என்னால் மறுக்கமுடியவில்லை. ஆகையால் என்னுடைய ஜிம்மில் 25 நாளில் 8-10 கிலோ வரை எடையை குறைத்தேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்