ஆப்நகரம்

விஜய்யுடன் நடிக்கும் பெங்காலி நடிகை!

டைரக்டர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெங்காலி நடிகை பாப்ரி கோஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

TOI Contributor 8 Aug 2016, 4:41 pm
டைரக்டர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெங்காலி நடிகை பாப்ரி கோஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil bengali actress with vijay
விஜய்யுடன் நடிக்கும் பெங்காலி நடிகை!


விஜய் தற்போது நடித்து வரும் படத்தில் பெங்காலி நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பரதன் இயக்கத்தில் தற்போது விஜய் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பெங்காலி நடிகை பாப்ரி கோஷ் என்பவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். பாப்ரி கோஷ் ஏற்கெனவே எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, விஜய் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் மகளாக நடிக்கிறாராம். இவருக்கும் விஜய்க்கும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாவிட்டாலும் விஜய்யுடன் பெரும்பாலான காட்சிகளில் வருகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்