ஆப்நகரம்

காயத்ரியை கதரவிட்ட கம்பீரமே... ஓவியாவுக்கு இப்படியும் ஒரு ரசிகர் புரட்சி படை...

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கம் முதல் பல்வேறு பிரச்னைகள் சந்தித்து வருகின்றது. ஆனாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எது எப்படி போனாலும் அதில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியாவுக்கு மக்களின் சார்பில் பலத்த ஆதரவு பெருகியுள்ளது.

TNN 17 Jul 2017, 3:36 pm

Samayam Tamil best wishes banner to big boss oviya
காயத்ரியை கதரவிட்ட கம்பீரமே... ஓவியாவுக்கு இப்படியும் ஒரு ரசிகர் புரட்சி படை...

ஆர்த்தி வெளியேற்றம்:
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டது மக்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிச்சா தான் மக்கள் நம்புறாஞ்கன்னு பஞ்ச் டைலாக் விட்ட ஆர்த்திக்கு ஒருவர் இப்படி பதிலடி கொடுத்துள்ளார்.

எல்லாம் சரி..மத்த நாளை விட இன்னிக்கு இவ்ளோ அதிக மேக்கப் எதுக்குடே?!.scriptedனு இவ்ளோ ஓப்பன்னாவா proof கொடுக்கிறது?! #ஆர்த்தி — காக்கா முட்டை! ! (@girikaalan) July 16, 2017
என்ன தான் ரியாலிட்டி ஷோன்னு சொன்னாலும், கிளம்புற நாள்ன்னு தெரிஞ்சு இவ்வளவு மேக்கப் ஏன்னு வெளுத்து வாங்கியுள்ளார்.

ஓவியாவுக்கு பேனர்:
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிரியாகவும், மக்கள் மத்தியில் நாயகியாகவும் மிளிர்கிறார் ஓவியா. இவருக்காக ‘ஓவியா புரட்சிப்படை’ என்ற பெயரில் யாரோ ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருக்கு பல பஞ்ச் டைலாக்குடன் பாராட்டும் விதத்தில் உள்ளது.

அதில்,
நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே... ஆர்த்தியை அளரவிட்ட ஆளுமையே... காயத்ரியை கதரவிட்ட கம்பீரமே.... பரணிக்கு Bye சொன்ன பாசமே...

தங்கத் தலைவரி ஓவியா அவர்களே
BiggBoss Titleஐ வெற்றிபெற வாழ்த்துகிறோம்
இவண் : ஓவியா புரட்சிப் படை
என்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்