ஆப்நகரம்

ஆரிக்கு அம்மாவாக நடிக்கும் பானுப்பிரியா?

ஆரி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் பானுப்பிரியா.

TOI Contributor 27 Aug 2016, 3:32 pm
முகமது ஐசக் இயக்கத்தில் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடிக்கும் புதிய படம் ’நாகேஷ் திரையரங்கம்’. இப்படத்தில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடிக்கிறார். இவருக்கு அம்மாவாக நடிக்க முன்னாள் நடிகை பானுப்பிரியா ஒப்பந்தமாகியுள்ளார். 1960ம் ஆண்டு கட்டப்பட்ட தியேட்டரை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil bhanupriya to play aaris mom
ஆரிக்கு அம்மாவாக நடிக்கும் பானுப்பிரியா?


காளி வெங்கட் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஹீரோயினுக்கான தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு முகமது ஐசக் இயக்கத்தில் வெளிவந்த படம் திகில் படம் அகடம். இப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீளமான வெட்டப்படாத திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்திலும் பானுப்பிரியா நடிக்கயிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்