ஆப்நகரம்

ஒரே நாளில் 60 கோடியை வசூலித்த மகேஷ் பாபு படம்!

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘பாரத் அனே நேனு’ படம் ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 40 கோடியை வசூலித்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 4:08 pm
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘பாரத் அனே நேனு’ படம் ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 40 கோடியை வசூலித்துள்ளது.
Samayam Tamil mahesh-babu


கொரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பாரத் அனே நேனு’. பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் மகேஷ்பாபு அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் உலகம் முழுவதும் 45 நாடுகளில் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. ‘பாரத் அனே நேனு’ திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.40 கோடி வரை வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ.60 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்