ஆப்நகரம்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தில் பாரதிராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடிக்கிறார்.

Samayam Tamil 26 Jul 2018, 5:11 pm
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடிக்கிறார்.
Samayam Tamil விஜய் சேதுபதி படத்தில் பாரதிராஜா!


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 25வது படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் 80 வயது நிரம்பிய நாடக கலைஞனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கெனவே படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார்.


மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்