ஆப்நகரம்

மலையாளத்தில் யு சான்று கிடைத்த படத்திற்கு தமிழில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது எப்படி?

அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் வெளியான பாஸ்கர்ஒரு ராஸ்கல்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது எப்படி என்று புரியாத புதிராக உள்ளது.

TNN 20 Dec 2017, 1:50 pm
அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் வெளியான பாஸ்கர்ஒரு ராஸ்கல்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது எப்படி என்று புரியாத புதிராக உள்ளது.
Samayam Tamil a certificate
மலையாளத்தில் யு சான்று கிடைத்த படத்திற்கு தமிழில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது எப்படி?

பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் நேற்று தணிக்கைக்கு சென்றது.
படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் குழந்தைகள் இந்த படத்தை பெற்றோர்களுடன் இணைந்துதான் பார்க்க முடியும். 18 வயதுக்கு குறைவானவர்கள் தனியாக இந்த படத்தை பார்க்க முடியாது.

இதே படம்தான் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘பாஸ்கல் தி ராஸ்கல்’ . இந்தப் படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த மலையாள படத்தின் ரீமேக்தான் தமிழில் உருவான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. படம். மலையாளத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டபோது யு சான்றிதழை பெற்ற நிலையில் தமிழில் மட்டும் எப்படி யு/ஏ சான்றிதழ் பெற்றது என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்