ஆப்நகரம்

பிக் பாஸ் டேனி - டெனிஷா ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்தாச்சு! குவியும் வாழ்த்து

நடிகர் டேனி தற்போது அப்பாவாகி உள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 29 Jun 2020, 5:11 pm
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்தவர் டேனியல் அன்னி போப் என்கிற டேனி. இந்த படத்தில் அவர் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற ரோலில் மிகவும் காமெடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் பேசும் வசனம் ஒன்று மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
Samayam Tamil Danny and Denisha


"ஃபிரண்ட் லவ் மேட்டரு.." என்ற வசனம் தற்போது ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று. அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதனை தொடர்ந்து மரகதநாணயம் உள்ளிட்ட பல படங்களில் டேனி நடித்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார் அவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தார் அவர் அந்த நிகழ்ச்சியில் தனது காதலி பற்றி அடிக்கடி மிக உருக்கமாகப் பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் உடனே தனது காதலி டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது..

"கடவுளிடமிருந்து எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ஒரு கிப்ட் கிடைத்திருக்கிறது, ஒரு குட்டி ஆண் குழந்தை. அவனை உங்கள் பிரார்த்தனையில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவனை ஆசிர்வதியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். தற்போது டேனி - டெனிஷா தம்பதிக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் இரகசியமாக தனது காதலியை திருமணம் செய்து கொண்டது பற்றி செய்தி வெளியான பிறகுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அவர்கள் மிக எளிமையாக ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்ட நிலையில் அது பற்றிய அறிவிப்பு வெளியில் வராமல் இருந்ததற்கு குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தான் காரணம் என தெரிவித்திருந்தார் டேனி. "இது போன்ற எனது வாழ்க்கையில் ஒரு அழகிய தருணத்தை உங்களுடன் தற்போது வரை பகிர முடியாமல் போனதற்கு சில குடும்ப பிரச்சனைகள் தான் காரணம். உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை, நாங்கள் கணவன் மனைவியாகக் புதிய பயணத்தைத் தொடங்குகிறோம்" என டேனி அப்போது கூறியிருந்தார்.

தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் சினிமா சூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வரும் டேனி தனது குடும்பத்தின் புதுவரவான மகனுடன் நேரத்தை தற்போது செலவிட்டு வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்