ஆப்நகரம்

பிக்பாஸ் 2 : இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்தவர்கள்?

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் நான்கு பேர் பெயர் இடம்பெற்றுள்ளது.

Samayam Tamil 10 Jul 2018, 4:48 pm
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் நான்கு பேர் பெயர் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil bigg-boss-tamil-2-elimination


வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வார புதிய தலைவராக ரம்யா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்கு வாரமும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வாரம் நாமினேஷன் கொஞ்சம் மாறுதல் இருந்தது. ஒவ்வொருவராக கன்பெக்சன் அறைக்கு அழைக்காமல் மூன்று மூன்று பேர்களாக அழைத்து அவர்களில் ஒருவரை அவர்களே நாமிநேஷனுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். அதன்படி யாஷிகா, நித்யா, பாலாஜி மற்றும் பொன்னம்பலம் தேர்வு செய்யப்பட்டனர்.

நடிகை யாஷிகா இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருப்பதால் அவர் வெளியே செல்ல வாய்ப்பில்லை. மேலும் நித்யா, பாலாஜி இருவரில் யார் ஒருவர் வெளியே சென்றாலும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்காது. ஆகையால் நடிகர் பொன்னம்பலம் வெளியே செல்லக்கூடும் என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்