ஆப்நகரம்

கணவரை இழந்த நடிகையை மணக்கிறேனா?: பிக் பாஸ் வின்னர் விளக்கம்

நடிகை மேக்னா ராஜுக்கும், பிக் பாஸ் கன்னடா 4 வின்னர் பிரத்தமுக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் பிரத்தம் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 20 Sep 2021, 2:29 pm
தனக்கும், நடிகை மேக்னா ராஜுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் அறிந்த பிக் பாஸ் 4 வின்னர் பிரத்தம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
Samayam Tamil bigg boss 4 winner pratham responds to wedding rumour with meghana raj
கணவரை இழந்த நடிகையை மணக்கிறேனா?: பிக் பாஸ் வின்னர் விளக்கம்



மேக்னா ராஜ்

நடிகை மேக்னா ராஜும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகனும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவும் 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்பொழுது கர்ப்பமாக இருந்த மேக்னா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் வைத்துள்ளார்.

மறுமணம்

மேக்னா தன் படங்கள் உண்டு, மகன் உண்டு என்று இருக்கிறார். இந்நிலையில் நடிகரும், பிக் பாஸ் கன்னடா 4 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவருமான பிரத்தமுக்கும், மேக்னா ராஜுக்கும் விரைவில் திருமணம் என்று யூடியூபில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரத்தம் கண்ணிலும் அந்த வீடியோ பட்டுள்ளது.

பொய்

வீடியோ குறித்து பிரத்தம் ட்விட்டரில் கன்னடத்தில் கூறியிருப்பதாவது, இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இதற்கு 2.70 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. வியூஸ் மற்றும் பணத்திற்காக சேனல்கள் இறங்கும்போது சட்டப்படி எதிர்கொள்வது தான் ஒரே வழி. சட்டப்படி அந்த வீடியோக்களை நீக்கும்போது அது பிற சேனல்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

Twitter-Olle Hudga Pratham

ரசிகர்கள்

திருமண வீடியோவை பார்த்த சிரஞ்சீவியின் ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். மேக்னா ராஜ் மறுமணம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் இது போன்ற வதந்தியை பரப்புவதை ஏற்க முடியாது என்கிறார்கள். திருமண வீடியோ குறித்து மேக்னா ராஜ் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்