ஆப்நகரம்

BiggBoss : மஹத்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா!

நடிகர் மஹத்துக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 26 Nov 2018, 3:29 pm
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் மஹத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா. பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டில் அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியவர். பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் நடிகர் சிம்பு தனக்கு ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாக ஐஸ்வர்யாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.
Samayam Tamil aishwaya-mahath


இந்நிலையில் தற்போது நடிகர் மஹத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மஹத் வட சென்னையைச் சேர்ந்த குப்பத்து வாலிபனாகவும், நடிகை ஐஸ்வர்யா பணக்கார வீட்டுப் பெண்ணாகவும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பிரபு சி ராம் என்பவர் இயக்குகிறார்.

இது ஒரு காதல் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்